முதல் மொழி என்று
நாங்கள் உரிமை கொண்டாடவில்லை.
உலகம் மலர்ந்ததன்
முதல் மகரந்தம்
உங்கள் வீட்டு முற்றத்தில்
இன்னும் கிடக்கலாம்.
அந்த பூவின் முகவரியில்
எங்கள் இனிமை
இன்னும்
ஒலித்துக்கொண்டிருக்கும்
யாதும் ஊரே! யாவரும் “கேளீர்”!
_____________________________ருத்ரா