சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை மாவோயிஸ்டுகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு தீவைத்து கொளுத்தினர்.
பச்சேலி நகரத்திற்கு அருகே நேற்று நள்ளிரவுக்குப் பின் 2.30 மணியளவில் சாலை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது 40க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர்.
கட்டுமானத் தளங்களை தாக்கி அழித்தனர். அதுமட்டுமின்றி சாலைப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 5 லாரிகளையும் தீவைத்து கொளுத்தினர்.
வாகனங்களை தீயிட்டுக் கொளுத்துவதற்குமுன்பாக லாரி டிரைவர்களின் செல்போன்களை மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் பறித்துக்கொண்டனர். இச்சம்பவத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் முழுமையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சத்தீஸ்கரில், ஒருவார காலத்திற்குள் தீவிரவாதிகள் நடத்திய மூன்றாவது தாக்குதல் இது. இன்னொரு சம்பவத்தில், கமலூர் ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் பாதைகளைத் தகர்த்து எறிந்தனர். அதே ஊரில் இரண்டு பயணிகள் பேருந்கள் மற்றும் ஒரு டிரக்கை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எரித்தனர்.
]
Source link