பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் ஷீல் சோனி நேற்று கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 2 பேர் கேட்டுக்கொண்டதையடுத்து, அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் அவர்களை காஷ்மீர் மாநிலம் கதுவா அருகே இறங்கியதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். அவர்களிடம் சில ஆயுதங்கள் இருந்ததால் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் அந்த உள்ளூர்வாசி தெரிவித்தார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அதேநேரம் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு விவேக் ஷீல் சோனி தெரிவித்தார்.
குர்தாஸ்பூர் மாவட்டம் தினநகர் காவல் நிலையம் (2015) மற்றும் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளம் (2016) ஆகியவற்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்த 2 மாவட்ட போலீஸாருக்கும் குண்டு துளைக்காத 9 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.– பிடிஐ
]
Source link