அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி பிரவீன் தொகாடியா இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகிறார்.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பதவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் அந்த அமைப்பின் மூத்த தலைவரான பிரவீன் தொகாடியா ஆதரவு பெற்ற வேட்பாளர் ராகவ ரெட்டி தோல்வி அடைந்தார். புதிய தலைவராக விஎஸ். கோக்ஜே தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு இந்துக்களுக்கு துரோகம் செய்வதாகவும் குற்றம்சாட்டிய தொகாடியா, அந்த அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதிகாரத்தில் இருப்பவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மறந்துவிட்டனர் என்றும் பாஜகவை மறைமுகமாக தாக்கினார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அகமதாபாத்தில் பிரவீன் தொகாடியா இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகிறார். இந்துக்களின் உரிமைகளைக் காக்க புதிய அமைப்பு ஒன்றை தொகாடியா அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
]
Source link