கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒரு குழந்தை பிரச்சாரம் செய்வதால் பாஜகவின் வெற்றி எளிதாகியுள்ளது என அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையில் இத்தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இருகட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். ‘‘பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் நரேந்திர மோடி’’ என சித்தராமையாக கடுமையாக விமர்சிஏத்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பேசியுள்ளார். பாஜக சமூகவலைதள ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
‘‘கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்காக குழந்தை ஒன்று பிரச்சாரம் செய்து வருகிறது. அதனால் பாஜகவின் வெற்றி எளிதாகி விட்டது. மொத்தமுள்ள 244 தொகுதிகளில் பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.
நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளான பிறகும் மக்கள் ஏழ்மையில் வாடுகின்றனர். மக்கள் குடிசையில் வாழும் நிலையில் இருப்பதற்கு காங்கிரஸே காரணம். அரசியலுக்காக நாங்கள் குடிசை பகுதிக்கு செல்லவில்லை. உண்மையிலேயே அந்த பகுதி மக்களின் வளர்ச்சியில் கவலை கொள்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்களின் நலனுக்காக பாடுபடுவோம்’’ எனக்கூறினார்.
]
Source link