ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வாய் திறக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார், பாஜகவிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு எதிர்க்கட்சியான பாஜக ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சித் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் முதல்கட்ட பிரச்சாரம் செய்துள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரஸும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெல்லாரியில் முதல்கட்ட பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
‘‘பிரதமர் மோடி செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகவில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறியுள்ளார்.
மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும். சித்தராமையா வாகனத்தை ஓட்டும்போது நேராக பார்த்த ஓட்டுகிறார். ஆனால் பிரதமர் மோடியோ, பின் பக்க கண்ணாடியை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுகிறார். வேலைவாய்ப்பை உருவாக்குது, விவசாயிகள் பிரச்சினை என காங்கிரஸின் எந்த ஒரு கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக இரண்டில் ஒன்றை முடிவு செய்யும் வாய்ப்புள்ளது. ஒரு கட்சி மக்களின் உண்மையை பேசி, நல்லதை செய்து வாக்குகளை கோருகிறது. ஆனால் பாஜக தொடர்ந்து மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த கட்சியிடம் இரந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது.
ரபேல் ஜெட் போர் விமான வாங்கியதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து பலமுறை காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி பதிலளிக்க தயாராக இல்லை’’ என பேசினார்.
]
Source link