கீழக்கரை முன்மாதிரி நகருக்காக டுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் மனதார பாராட்டுகிறேன்.வாழ்த்துகிறேன்.நேற்றைய தினம் கீழக்கரையில் நடந்த பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து டிரஸ்ட் நிறுவனர்களால் விரிவாக எடுத்துரைக்கப் பட்டது.மேலும்,நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசு நிர்வாகிகளும் தங்கள் துறைசார்ந்த கருத்துகளை முன்மொழிந்தார்கள்.
குறைந்தபட்சம் 7 முதல் 10 ஆண்டுகள் என்ற நீண்ட காலத்தை கொண்ட இத்திட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதி அரசாங்க செயல் திட்டங்களை சார்ந்திருக்கிறது.மேலும் திட்டத்தின் முக்கிய செயல்பாட்டு தளமாக(action plan) குறிப்பிடப்படும் மக்கள் பங்களிப்பு என்பது மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வரையறுக்கப் பட்டிருப்பது இத்திட்டத்திற்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
கீழக்கரை நகர் மற்றும் ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காக தாராள மனம் கொண்ட சிலரால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் முழுமையாக வெற்றிபெற வேண்டுமெனில் திட்டவரைவில் பெரும் சவாலாக நிற்கும் அரசு உதவி மற்றும் மக்கள் பங்களிப்பு என்ற விசயங்களில் டிரஸ்ட் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.அனைவரும் பங்களிக்கும் வகையிலான விரிந்த செயல்பாட்டுத் தளம் என்ற மாற்று ஏற்பாடே இத்திட்டத்திற்க்கு கூடுதல் வலுசேர்க்கும் என கருதுகிறேன்..
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை சந்திக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்..
Source
அப்துல் ஹமீது
தமிழ் மாநில பொது செயலாளர்.
SDPI கட்சி..