பரிமாறும் அளவு – 2 நபருக்கு
தேவையான பொருள்கள் –
- சீனி அவரைக்காய் – 100 கிராம்
- சாம்பார் பொடி – 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- புளி – நெல்லிக்காய் அளவு
- உப்பு – தேவையான அளவு
அரைக்க –
தாளிக்க –
- எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1/2
- காயத்தூள் – சிறிது
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை –
- சீனி அவரைக்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சீனி அவரைக்காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதோடு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் 15 நிமிடம் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- வெந்த பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
- புளியை ஊற வைத்து 150 மில்லி தண்ணீர் அளவுக்கு கரைத்து வைக்கவும்.
- தேங்காய், வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள சீனி அவரைக்காயை சேர்த்து கிளறி அதோடு புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
- மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- மசாலா கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான சீனி அவரைக்காய் கூட்டு ரெடி.