ராமநாதபுரத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மே 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மின்வாரியச் செயற்பொறியாளர் கு. யோகானந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ராமநாதபுரம் மின்பகிர்மானக் கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.
