கீழக்கரையில் வீட்டிற்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் புதன்கிழமை விட்டனர்.
கீழக்கரை கோகுலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபைராஜ். இவரின் வீட்டின் முன்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
வனக்காப்பாளர் கார்மேகம்,வேட்டை தடுப்புக் காவலர் நாராயணன், தீவுக் காவலர் சேதுபதி ஆகியோர் அந்த வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். வீட்டின் ஒரு மூலையில் இருதலை மணியன் பாம்பு இருந்தது. சுமார் 4 அடி நீளமும் 2கிலோ எடையும் கொண்ட இந்தப் பாம்பினை வனத்துறையினர் பிடித்தனர். அந்தப் பாம்பு திருப்புல்லாணி அருகே இதம்பாடல் சதுப்புநில காட்டுப்பகுதியில் வனத்துறையினரால் புதன்கிழமை காலையில் விடப்பட்டது.
Source : dinamani