கீழக்கரை உபமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 9ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழக்கரை, அலவாய்கரைவாடி, மாயாகுளம், முஹம்மதுசதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல் மற்றும் மோர்குளம் ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் தடைபடும் என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.