எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.சென்னை ராயபுரம் புதுசூரக்குடி நாடார் உறவின்முறை மண்டபத்தில் மே 13 அன்று மாநில பிரதிநிதிகள் சபை கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரஃபிக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆண்டறிக்கையையும், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா கட்சியின் நிதி அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை கட்சியின் தேர்தல் அதிகாரியும் எஸ்.டி.பி.ஐ தேசிய செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஆவாத் ஷெரீப் தனது மேற்பார்வையில் நடத்தினார். மேலும் கர்நாடக மாநில செயற்குழு உறுப்பினர் ஜாவித் ஆஸம் துணை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். நடைபெற்ற தேர்தலின் முடிவில் புதிய மாநில செயற்குழு உறுப்பினர்களும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தமிழக பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிய மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகளை இன்று (மே-14) தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் வைத்து நடைபெற்ற பொதுக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வில் காலை 11 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் அறிவிப்பு செய்தார்.எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக கே.கே.எஸ்.எம்.தெஹலான் பாகவி, பொதுச்செயலாளர்களாக நிஜாம் முகைதீன், கீழக்கரை அப்துல் ஹமீது, துணைத் தலைவர்களாக நெல்லை முபாரக், அம்ஜத் பாஷா, பொருளாளராக எஸ்.எம்.ரஃபிக் அகமது, செயலாளர்களாக அமீர் ஹம்சா, உஸ்மான்கான், ரத்தினம், அப்துல் சத்தார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக அபுபக்கர் சித்திக்(முத்துப்பேட்டை), ஹசன் பாபு(ஈரோடு), ஃபாரூக்(தஞ்சை), தவுலதியா(இராமநாதபுரம்), சாம்வேல் பால்(சென்னை), நஜ்மா(மதுரை), முஹம்மது பிலால்(காஞ்சிபுரம், அபு தாஹிர்(கோவை), தாஜூதீன் (நாகை)ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தீ
ர்மானம்: 1.விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையிலான வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடத்தும் வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்…!
***************************
தற்போதுள்ள தேர்தல் முறை ஜனநாயகமானது அனைத்து சமூக மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க முடியாத நிலையில் உள்ளது. ஜனநாயக முறையில் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையானது பணநாயகம் மூலம் தவறாக பயன்படுத்தும் அவலமும் அரங்கேறி வருகின்றது. இதனால் உண்மையான ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது.
ஆகவே, இன்றைய தேர்தல் நடைமுறை முற்றிலும் மாற்றப்பட்டு விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை கொண்டுவந்தால் மட்டுமே அனைத்து சமூக மக்களுக்கும் ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவமும், வாக்குக்கு பணம், பரிசு அளிக்கும் அவலம் நீங்க வழிபிறக்கும். எனவே மத்திய அரசு தேர்தல் சீர்த்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளும்போது விகிதாச்சார அடிப்படையிலான வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடத்தும் வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என இப்பொதுகுழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மேலும் இந்த விசயத்தில் ஒத்தக்கருத்துடைய அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 2 விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை மத்திய அரசு திருப்பப் பெற வேண்டும்…!
*******************************************
மோடி அரசின் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்திற்காக பன்னாட்டு மற்றும் தனியார் முதலாளிகளுக்கு இந்திய விவசாயிகளின் நிலங்களை சட்டப்பூர்வமாகப் பறித்து, தாரை வார்க்கும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மசோதாவை கொல்லைப்புற வழியாக அவசரச் சட்டம் மூலம் மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக நிறைவேற்றியுள்ளது. 70 சதவீத விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்த முடியாது என்ற பிரிவை நீக்கி சர்வாதிகார போக்குடன் சட்டத்தை நிறைவேற்றியுள்ள பாஜக அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு சரத்துக்கள் அச்சட்டத்தில் உள்ளன. வேளாண்மை நிறைந்த நாடான இந்தியாவுக்கு இந்த சட்டம் பாதகமான சூழலை உருவாக்கும் என்பதால், விவசாயிகளுக்கு எதிரான இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை திருப்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகளுடன் எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என இப்பொதுக்குழு தெரிவிக்கிறது.
தீர்மானம்: 3.UAPA கருப்புச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்…!
************
பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் யு.ஏ.பி.ஏ (UAPA) தடா, பொடா சட்டங்களின் கடுமையான பிரிவுகளை விட கடுமையான பிரிவுகள் இச்சட்டத்தில் உள்ளன. இச்சட்டம் மனித உரிமைக்கும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கும் எதிராகவே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்படுகிறது.
கொடிய கருப்புச் சட்டமான யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் தமிழகத்திலும் அப்பாவி இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே UAPA சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும், இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேலும் இரகசிய விசாரணை, ஜாமீன் மறுப்பு போன்ற கொடிய விசாரணை முறைகள் நிறைந்த இச்சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 4.அப்பாவி இளைஞர்கள் கைது! தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு அப்பாவி இளைஞர்கள் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்!
***********************************
தமிழகத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கைது செய்வது, தீவிரவாதிகளாக சித்தரிப்பது, விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பது, அப்பாவி சிறைவாசிகளின் வழக்குகளை சட்டரீதியாக நடத்திவருபவர்களை கொடிய கருப்புச் சட்டங்களில் கைது செய்வதுமாக காவல்துறையின் அராஜக நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக மதுரை போன்ற இடங்களில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று போலியான வழக்குகளில் காவல்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதேப்போல் அப்பாவி சிறைவாசிகளின் வழக்குகளை சட்டரீதியாக நடத்தி வருபவர்களை கைது செய்து UAPA என்ற கொடிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை தனது முஸ்லிம் விரோத போக்கினை மேற்கொண்டு வருகின்றது.
காவல்துறையின் இந்த முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதோடு தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு அப்பாவிகளின் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 5.தென்மாவட்ட கொலைகள் சம்பந்தமாக தூண்டுகோலாக இருப்பவர்களையும், அவர்களுக்கு அடைக்கலம் தருவோரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்…!
*****************
கடந்த சில மாதங்களாக தென் மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இக்கொலைகள் அதிகமாகி வருகின்றன. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கொலைகள், ஜாதிய ரீதியான கொலைகள், பழிக்குப்பழி கொலைகள் என கொலைகள் நாள்தோறும் நீண்டுகொண்டு செல்கின்றன.
ஆகவே ஜாதிய பின்புலத்தில் இருந்து செயல்படும் குற்றவாளிகளையும், அதற்கு தூண்டுகோலாக இருப்பவர்களையும், அவர்களுக்கு அடைக்கலம் தருவோரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மேலும் இக்கொலைகள் அதிக அளவில் நடப்பதற்கு வேலைவாய்ப்பின்மையும் ஒரு காரணமாக இருப்பதால் தமிழக அரசு இவ்விசயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 6. DCW ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்…!
***********
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டுவரும் DCW கெமிக்கல் ஆலையால் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆறுமுகநேரி, பேயன்விளை மற்றும் காயல்பட்டினம் உள்ளிட்ட 20 க்கும் மேற்ப்பட்ட பகுதிகளில் வசித்துவரும் மக்கள் புற்றுநோய் உட்பட கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியிலுள்ள மீன்வளம், உப்பள தொழில் முற்றிலும் நசிந்து வருகிறது. இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக, இந்த ஆலையினால் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி சர்வதேச விதிமுறைகளை மீறி காஸ்டிக் சோடா பி.வி.சி. மற்றும் சி.பி.வி.சி போன்ற பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து அதன் கழிவுகளை கடலில் கலந்து விடுகிறது. மேலும் தற்போது அரசின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக தனது ஆலையை விரிவாக்கம் செய்து வருகிறது.
DCW ஆலையின் நடவடிக்கைக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது. மேலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
ஆகவே தமிழக அரசு உடனடியாக ஒரு நிபுணர் குழுவை கொண்டு ஆலையின் கழிவு வெளியேற்றும் தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்படைந்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துவதோடு DCW ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 7. மதவாத சக்திகளின் வெறுப்பு நடவடிக்கைகளை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் அணிதிரள வேண்டும்…!
********************************************************
மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது முதல் நாடு முழுவதும் மதவாத சக்திகள் தலைதூக்கி வருகின்றன. மதவாதம் தொடர்பான சர்ச்சைகளும், வன்முறைகளும், வெறுப்பு பேச்சுக்களும், நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தேசத் தந்தை காந்தியை கொன்ற தேச விரோதி கோட்சைவை தூக்கிப்பிடித்தும், காந்தியை சிறுமைப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
லவ் ஜிகாத் பிரச்சாரம், கர்வாப்சி என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்யும் நிகழ்வு, முஸ்லிம் ஓட்டு வங்கி அரசியலை தடுக்க முஸ்லிம்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை அளிக்கக் கூடாது, வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும். மக்கள் தொகை விகிதாச்சார அதிகரிப்பை தடுக்க முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்பன போன்ற வெறுப்பு அறிக்கைகளும், நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மதவாத சக்திகளின் இந்த போக்கு ஆரோக்கியமானதல்ல. இத்தகைய மதவெறுப்பு நடவடிக்கை இந்திய ஜனநாயக அமைப்புக்கு முற்றிலும் எதிரானதும், இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கி இழுத்து செல்லவே உதவும் என்பதனால் இதனை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் அணிதிரள வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 8. ஆந்திரா-தெலுங்கானா போலி என்கவுண்டர்கள் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்…!
***************************************
ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
செம்மரக்கட்டை கடத்தலில் பெரும் புள்ளிகளும், அரசியல்வாதிகளும் பின்ணனியில் உள்ள நிலையில், அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதை விடுத்து சாதாரண கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வழக்கு குறித்து விசாரித்து வரும் ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வுக் குழு உண்மைகளை வெளிக்கொண்டுவராது என்பது ஆந்திர மாநில உயர் நீதிமன்ற விசாரணையின் போதே தெரிய வருகிறது.
ஆகவே இவ்வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். தமிழக அரசு அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மேலும் ஆந்திர சிறைகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறைபட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
இதேப்போன்று தெலுங்கானா மாநிலம் வாராங்கல் சிறைச்சாலையிலிருந்து விசாரணைக்காக ஹைதராபாத்
குற்றவியல் நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்ட விசாரணை கைதிகளான ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக சுட்டுக் கொல்லப்பட்டதையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
கைவிலங்கிடப்பட்ட கைதிகள் கைதிகள் தங்களை தாக்க முற்பட்டதனால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டியதாயிற்று எனக் கூறும் தெலுங்கானா போலீசாரின் ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டதாகவே உள்ளது.
ஆகவே மேற்க்கண்ட இப்படுகொலைகள் குறித்த உண்மையை வெளிக்கொணர்ந்து, இதற்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவர்களை சட்டரீதியாக தண்டிக்க இவ்வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 9.மோட்டார் வாகன சட்டம் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்…!
***********
தொழிலாளர் நலன்களை பாதிக்கும் வகையில் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களில் திருத்தங்களை செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. அந்த வரிசையில் தற்போது நடைமுறையில் உள்ள மோட்டார் வாகன சட்டம் (1988) முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம்-2015 என்ற சட்ட மசோதாவின் முன் வடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இச்சட்டம் சாலை போக்குவரத்து தொழிலை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களான ஓட்டுனர்கள், வாகன பராமரிப்பு பணியாளர்களை நேரடியாக பாதிக்கிறது.
இச்சட்டம் பயன்பாட்டிற்கு வருமேயானால், அந்நிய பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் மட்டுமே பயன் அடையும் வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்படும், குறிப்பாக மாநில அரசின் அதிகாரங்களை முழுமையாக பறித்து, ஓட்டுநர் உரிமம், வரிவசூல் ஆகியவற்றில் தனியாரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த சட்ட முன்வடிவு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 10. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கைகளை வேண்டும்..!

தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்க வக்ப் வாரிய நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் மத்திய வக்ப் வாரியத்தின் திட்டங்கள் பல தமிழகத்தில் செயல்படுத்தபடாமல் உள்ளன. பலகோடி மதிப்புள்ள வக்ப் சொத்துக்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன.
இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கூறப்படுகிறது. ஆகவே, ஆக்கிரமிப்பிலுள்ள வக்ப் சொத்துக்களை மீட்டு சமூகத்துக்கு பலனளிக்கும் வகையில் அதனை பயன்படுத்த வேண்டும் எனவும், காலியாக உள்ள வக்ப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வக்ப் வாரியத்தையும், தமிழக அரசையும் இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 11. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்…!
**********************
அடித்தட்டு சாமானிய மக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், வளர்ச்சி என்ற பெயரில் தனியார் பெரு முதலாளிகளுக்கு சாதமான திட்டங்களையும், சட்ட திருத்தங்களையும் மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகின்றது.
ரயில் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் கட்டண உயர்வு, சுங்க கட்டண உயர்வு, மானிய குறைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை, மக்கள் விரோத சட்டங்கள், விவசாயிகளை நசுக்கும் சட்டங்கள் போன்ற பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, பெரு முதலாளிகளின் முன்னேற்றத்துக்கு காட்டும் நடவடிக்கைகளை விடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 12. இடஒதுக்கீடை தமிழக அரசு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்..!
******************
கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களின் நிலைமை மிக மோசமான நிலையில் இருப்பதை ராஜேந்திர சச்சார், ரங்கநாத் மிஸ்ரா மற்றும் குண்டு கமிட்டிகளின் அறிக்கைகள் தெளிவுப்படுத்துகின்றன. இதனை களைய இடஒதுக்கீடு ஒன்றே தீர்வு என அவர்கள் பரிந்துரையும் செய்துள்ளனர். மத்தியில் முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பரிந்துரை செய்தது. ஆனால் மதவாத சக்திகளின் எதிர்ப்பினால் இடஒதுக்கீடு உட்பட கமிஷன்கள் அளித்த பல்வேறு பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன.
இதேப்போன்று தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடை முந்தைய அரசு அறிவித்தது. ஆனால் இந்த அளவு மிகமிகக் குறைவு என்பதால் மக்கள் தொகைக்கு ஏற்ப அதனை 7 சதவீதமாக உயர்த்தித் தர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போதைய தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்குவதாக தேர்தலுக்கு முன்னும், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஆகவே முஸ்லிம்களின் ஜூவாதார கோரிக்கையான இடஒதுக்கீடை தமிழக அரசு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், 3.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும் எனவும், மத்தியில் ரங்கநாத் கமிஷனின் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 13.பூரண மதுவிலக்கை கொண்டுவருவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்…!
****************************************
பல்வேறு சமூக தீங்குகள் மற்றும் குற்றங்களுக்கு மதுபானம்தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆகவே பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஆனால், வருவாய் ஈட்டும் நோக்கில் மதுபானக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் அரசே தொடர்ந்து நடத்தி வருகிறது. அரசின் இச்செயல் கவலையளிப்பதாக உள்ளது.
இருப்பினும் மதுவிலக்கு ஒன்றே பல குற்றச்செயல்களை தடுக்கும் என்பதால், உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டாலும், கேரளாவைப் போன்று படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.
சென்னை ராயபுரம் புதுசூரக்குடி நாடார் உறவின்முறை மண்டபத்தில் மே 13 அன்று மாநில பிரதிநிதிகள் சபை கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரஃபிக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆண்டறிக்கையையும், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா கட்சியின் நிதி அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை கட்சியின் தேர்தல் அதிகாரியும் எஸ்.டி.பி.ஐ தேசிய செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஆவாத் ஷெரீப் தனது மேற்பார்வையில் நடத்தினார். மேலும் கர்நாடக மாநில செயற்குழு உறுப்பினர் ஜாவித் ஆஸம் துணை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். நடைபெற்ற தேர்தலின் முடிவில் புதிய மாநில செயற்குழு உறுப்பினர்களும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தமிழக பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிய மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.

தீர்மானம்: 14. லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த லோக் அயுக்தாவை தமிழகத்தில் விரைவாக அமைக்க வேண்டும்…!
**************************************
அரசின் அனைத்து துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல், உயர் அதிகாரிகள் வரை மக்கள் சேவைக்காக லஞ்சம் பெறும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து துறை அலுவலகங்கள், காவல் நிலையங்கள், தாலுகா அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவகங்கள் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இதேபோன்று கிராணைட், கனிம மணல் முறைகேடு, ஆவின்பால் முறைகேடு மூலம் பல ஆயிரம் கோடி ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் இத்தகைய ஊழல் முறைகேடுகளே நாட்டின் முனேற்றத்துக்கும், வறுமையை ஒழிப்பதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
இத்தகைய ஊழல், முறைகேடுகளின் பின்னணியிலேயே அதிகாரிகளின் தற்கொலைகள் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன.
ஆகவே தமிழகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்தி லோக் அயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த மார்ச் 03 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 வரை தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறுகட்ட போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தியது. தமிழகத்தில் லோக் அயுக்தாவை அமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.
ஆகவே புரையோடிப்போயுள்ள லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஊழல் கண்காணிப்பகத்தை (லோக் அயுக்தா) தமிழகத்தில் விரைவாக அமைக்க வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 15. முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து கைதிகளையும் அவர்களின் நன்னடத்தை-கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்…!
***************
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் பல்வேறு விதமான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகிவருகின்றனர். ஜாமீன் மறுப்பு, பரோல் மறுப்பு, மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி மறுப்பு, மற்ற சிறைக் கைதிகளுக்கு உள்ளது போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதில் பாரபட்சம் போன்றவற்றால் அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு சிறைக்கைதிகள் நன்னடத்தை மற்றும் கருணையின் அடிப்படையில் விடுவிக்கப்படும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் அதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
ஆகவே தமிழக சிறைவாசிகள் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அவர்கள் மீதான மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து கைதிகளையும் அவர்களின் நன்னடத்தை-கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 16. தமிழக அரசு கல்குவாரிகளை ஏற்று நடத்த வேண்டும்…!
**************
தமிழகத்தில் செயல்படும் கல்குவாரிகளில் பல அனுமதி பெறாமல் அதிகாரவர்க்க துணையுடன் இயங்கி வருகின்றன. மேலும் அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் ஒப்பந்தத்தை மீறி அதிக அளவில் பாறைகளை வெட்டி கோடிக்கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அவ்விடங்களில் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர்.
பல இடங்களில் வலுக்கட்டாயமாக மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர் ஆதாரங்களும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகின்றன.
கல்குவாரிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை விடுத்து அரசே ஏற்றுநடத்தினால் மட்டுமே இத்தகைய கல்குவாரி முறைகேடுகளை தடுக்க முடியும் என்பதால், தமிழக அரசே கல்குவாரிகளை ஏற்று நடத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 17. கூடங்குளம் 3 மற்றும் 4வது அணு உலை திட்டத்தை கைவிட வேண்டும்…!
************************************
அமெரிக்காவுடன் ஏற்ப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்திய எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய 2020 ஆம் ஆண்டுக்குள் 40000 மெகா வாட் திறனுள்ள அணு உலைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற ஒப்பந்த முடிவின்படி நாடு முழுவதும் அணு உலைகளை அமைக்கும் திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி கூடங்குளத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 2 உலைகளுடன், கூடுதலாக 4 உலைகளை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி புதிய அணு உலைகளை அமைக்கும் ரஷ்ய நிறுவனம், அணுசக்தி விபத்து பொறுப்பு சட்ட விதிகளை ஏற்க மறுத்துள்ளது. ஏற்கனவே கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் இரண்டு அணு உலைகள் தொடர்பான பல்வேறு ஐயப்பாடுகளுக்கு தீர்வுகள் எட்டப்படாத நிலையில், மக்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் பல்வேறு கோளாறுகளுடன் இயங்கி வருகிறது.
ஒரே இடத்தில் அதிகளவில் அமைக்கப்படும் அணுஉலை பூங்காக்கள் மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஆபத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தவை என்பது ஜப்பானின் புகுஷிமா அணு உலை பூங்கா நமக்கு உணர்த்தியுள்ளது. இதையடுத்து அணு உலைகள் குறித்து உலகம் முழுவதும் அச்சங்கள் எழுந்தன. விபத்து நடந்த ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகள் அணு உலை பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவில் மட்டும், குறிப்பாக தமிழர்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி இந்தியாவுடன் தடையற்ற யுரேனியம் ஏற்றுமதி ஒப்பந்தம் செய்துள்ள ஆஸ்திரேலியா, தனது நாட்டில் எந்த அணு உலையையும் அமைக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஆகவே அணுசக்தி பூங்காக்கள் மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஆபத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தவை என்பதால், கூடங்குளத்தில் அமைக்கப்படவிருக்கும் 3வது மற்றும் 4வது அணு உலைகளை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.