கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டையைப் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருக்கின்றன. கடன் அட்டையைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
* உங்கள் கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்கப்படும் தொகைக்கு நீங்களே பொறுப்பானவர்.
* கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பொருட்களின் விலை, இதர நிதி கட்டணங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
* கிரெடிட் கார்டு லிமிட்டுக்கு மேல் பொருட்களை வாங்குவது போன்று உங்கள் கார்டை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
* கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செலவுக்கு நீங்கள்தான் பணம் செலுத்த வேண்டும் என்பதை எப்போதும் மனதில் இருத்த வேண்டும். கிரெடிட் கார்டை உபயோகிக்கும்போது திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும்.
* பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் தாமதம், வரம்புக்கு அதிகமாகப் பொருட்களை வாங்குவது போன்றவை உங்கள் கடன் அட்டையின் மதிப்பைக் குறைக்கும்.
கீழ்க்கண்ட விஷயங்களில் தவறாதீர்கள் :
* உங்கள் மாதாந்திரக் கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த அளவு கட்டணத்தையாவது தவறாது செலுத்துங்கள். ஒவ்வொரு மாதமும் செலவழித்த தொகையை மொத்தமாக மாதா மாதம் செலுத்துவது இன்னும் சிறந்தது. ஏனெனில் இவ்வாறு மொத்தமாகப் பணம் செலுத்துவது, அதிகமான வட்டி செலுத்துவதில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
* ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் பணம் செலுத்துங்கள்.
* உங்களின் அனைத்துப் பரிமாற்றங்களும் உங்களது கிரெடிட் கார்டின் செலவழிக்கும் எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* உங்களால் திரும்பச் செலுத்த முடியாத அளவுக்கு மேல் கிரெடிட் கார்டை பயன்படுத்தாதீர்கள்.
கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது இந்த விதி முறையை பின்பற்றுங்கள்:-
கிரெடிட் கார்டை பயன்படுத்திச் செலவழிக்கும் தொகை, உங்கள் வருமான வரி கழித்த வருவாயில் 20 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. மாத மாதம் நீங்கள் செலவழிக்கும் தொகையைக் கண்காணிக்க கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஒரு சுலபமான வழியை ஏற்படுத்தித் தருகின்றன.
அந்த வசதியைப் பயன்படுத்தும்போது நீங்கள் அதிகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் கார்டை முறையாகப் பயன்படுத்தினால், உங்களுக்கு கடன் அளிக்கும் நிறுவனத்தினர், நீங்கள் உங்கள் கணக்கை செம்மையாக நிர்வகிக்கத் தெரிந்தவர் என்று அறிந்துகொள்வார்கள்.
நீங்கள் முறையாக கிரெடிட் கார்டை பயன்படுத்திய ஆவணங்கள் இருப்பதால், உங்களால் அதைக் கொண்டு அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்கலாம்.