விபத்து தவிர்த்தல்
16/5/2014 கீழக்கரை, நடுத்தெரு, ஜுமுஆ மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகைக்குப்பின் விழிப்புணர்வு நினைவூட்டலாக டவுன் காஜி ஆற்றிய உரையின் சாரம் (மையக் கருத்து) :
• நமது ஊரில் சிறுவர்கள், மாணவர்களுக்கு பைக் கார்கள் வாங்கி கொடுத்து வரும் நிலையை நிறுத்தவேண்டும்.
• பிள்ளைகள் யார் யாருடன் சேருகிறார்கள் எங்கு செல்கின்றனர், எவருடன் செல்கின்றனர், ஏன் செல்கின்றனர், எதில் செல்கின்றனர் என விசாரித்து கண்காணிக்க பெற்றோர், உறவினர்கள், பெரியோர்கள் கடமை பட்டுள்ளனர்.
• நமது ஊர் வெளியே அமைந்துள்ள (National Highway) தேசிய நெடுஞ்சாலையில் பல பெரிய வாகனங்களிலும் தொடராக பலவகை வாகனங்களிலும் சென்றுவருகின்றனர்.
நம் இளைஞர்கள் வேகமாகவும் பலரை ஏற்றிக்கொண்டும் ஆபத்தை அறிந்தும் செல்கின்றனர் இன்னிலை தவிர்க்கப்படவேண்டும் தடுக்கப்படவேண்டும்.• இரவில் இளைஞர்கள் நீண்ட நேரம் அமர்ந்து பேசுவதும் வெளியிலே வாகனங்களிலும் சுற்றுவதும் தவிர்க்கப்படவேண்டும் .
• அரசு, அமைப்புகள், ஜமாஅத்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைக் காட்டிலும் ஒவ்வொரு இல்லங்களிலும் இதுபற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
• பொதுவாக வண்டியில் செல்பவர்கள் தங்கள் டிரைவர்கள் என்ன வேகத்தில் எவ்வாறு செல்கின்றனர் என்பதை கண்காணித்துவரவேண்டும்.
• சமீபத்தில் நிகழ்ந்த பரிதாபமான விபத்து மரணம் நம்மை கவலைக்கொள்ளவும் சிந்திக்கவும் வைக்கிறது.
அவசரமாய் ஓட்டுவதும்,
அவசியமின்றி ஓட்டுவதும்,
அனுபவமின்றி ஓட்டுவதும்
தவிர்க்கப்படவேண்டும்.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
التأني من الله و العجلة من الشيطان
நிதானம் அல்லாஹ்வின் புறத்தில் உள்ளதுஅவசரம் ஷைத்தானின் தூண்டுதலால் ஏற்படக்கூடியது
வல்ல அல்லாஹ் நம்மையும் நம் சந்ததியினரையும் ஆபத்திலிருந்து காத்தருள்வானாக. ஆமீன்
