கீழக்கரை பிரப்புக்கள் தெரு- வைச் சேர்ந்த ஜனாப். ஐய்யூப்கான் அவர்களின் மகன் சமீர் அவர்கள் நேற்று பகல் 3:00 மணியளவில் இராமநாதபுரம் To இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
பைக்கை ஓட்டிச் சென்ற இவருடைய நண்பர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமணையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர்களுக்காக எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துஃவா செய்யுங்கள்.
அன்பு சமுதாய சொந்தங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக தன் குடும்பத்தின் நலன்னிற்க்காகவும் கடல் கடந்து தன் சந்தோஷத்தையும் இழந்து எத்தனை சகோதரர்கள் கஷ்டப்பட்டு வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள் இவர்கள் படும் கஷ்டத்தை பிள்ளைகளிடமும் குடும்பத்தார்களிடமும் காட்டுவது கிடையாது என்பதே உண்மை தன் மகன் கல்லூரில் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு நடந்து செல்லும் தொலைவில் கல்லூரி,பள்ளிக்கூடம் அமைந்து இருந்தாலும் பைக்கை வாங்கிக் கொடுப்பது இப்போது ஒரு பொழுது போக்காகப் போய் விட்டது என்பதே எதார்த்த உண்மை சற்று சிந்தித்துப் பாருங்கள் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது அதனால் உங்களின் அன்பு செல்வங்களுக்கு அதிகம் செல்லம் கொடுக்க வேண்டாம் முதலில் உங்களின் பிள்ளைகளுக்கு ஓட்டுநர் உரிம்மம் உள்ளதா என்பதை தாங்கள் அறிய வேண்டும் அப்படி இல்லா விட்டால் பைக்கை ஓட்டுவதை தாங்கள் முழுமையாக தடுக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது காரணம் பள்ளியில் பயிலும் மாணவன் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இது தான் இப்போது கீழக்கரை மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது இது தவறும் பட்ச்சத்தில் கீழக்கரை சமுக அமைப்பின் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் மற்றும் மாவட்ட R.T.O.அவர்களிடமும் மனுக்கள் கொடுத்து ஓட்டுநர் உரிம்மம் இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க முயற்சிகள் மேற்க் கொள்ளப்படும் இனி வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் விபத்துக்களை தவிர்க்க ஒவ்வொரு பெற்றோர்களின் கையில் தான் உள்ளது இந்த திட்டத்தினை ஒன்றுப்பட்டு செய்திட எல்லாம் வல்ல இறைவனிடம் துஃவா செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
தகவல்: ஜனாப்.முஜீப், கீழக்கரை