கீழக்கரை, ஜூன் 14: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனமான வெல்பர் அசோசியேசன் மற்றும் எக்ஸ்னோரா இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவர்கள் நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேலத்தெரு ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ஞானகலாவதி தலைமையில் நடைபெற்றது. வெல்பர் அசோசியேசன் மேலாளர் அப்துல் அஜீஸ், எக்ஸ்னோரா அமைப்பின் மக்கும் குப்பை மக்காத குப்பை தயாரிப்பு மேலாளர் தணிகாசெல்வம் முன்னிலை வகித்தனர்.
தணிகாசெல்வம் பேசுகையில்,கீழக்கரையில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து போடுவதற்கு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மேலத்தெருவில் அனைத்து வீடுகளுக்கும் சலுகை விலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இரு வாளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 500 வீடுகளைச் சேர்ந்த குப்பைகள், இதன்மூலம் மக்கும், மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது,” என்றார்.
Courtesy : Dinakaran